‘SK-16’ சூப்பர் அப்டேட்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான பாடல் பதிவு துவங்கியது!

செய்திகள் 8-Jun-2019 11:52 AM IST VRC கருத்துக்கள்

‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’, மற்றும் ஆர். ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என்று நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படம், விகேன்ஷ் சிவன் இயக்கும் படம் ஆகியவற்றிலும் நடிக்க இருக்கிறார். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். நேற்று (ஜூன்-7) பாண்டியராஜின் பிறந்த நாள்! இதனை முன்னிட்டு இசை அமைப்பாளர் டி.இமான் நேற்று இப்படத்திற்கான பாடலை உருவாக்கும் பணியை துவங்கினார்! இந்த தகவலை டி.இமான் வெளியிட, இதற்கு இயக்குனர் பாண்டிராஜ் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்த நாளை உங்கள் வாழ்த்துக்களால் இனிய நாளாக மாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி’’ என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, சிவகார்த்திகேயனின் 16-ஆவது படமாக உருவாகும் இப்படத்தில் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றன்ர். இவர்களுடன் யோகி பாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா, ,சமுத்திரக்கனி என்று பெரும் நட்சத்திர பாட்டாளமே நடிக்கிறது.

#SK #SivaKaerthikeyan #Pandiraj #DImman #Arunrajakamaraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;