நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் திடீர் மரணம்!

நாடகம் மற்றும் சினிமா நடிகரும் எழுத்தாளருமான கிரேசி மோகன் மாரடைப்பால் திடீர் மரணம்!

செய்திகள் 10-Jun-2019 3:13 PM IST VRC கருத்துக்கள்

பிரபல நாடக ஆசிரியரும், நாடகம் மற்றும் சினிமா நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான கிரேசி மோகன் சற்றுமுன் சென்னையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 66. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி உட்பட ஏராளமான படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள கிரேசி மோகன் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, ரஜினியின் ‘அருணாச்சலம்’ உட்பட பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கிரேசி மோகன் என்றாலே அவரது நகைச்சுவை நாடங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். மாது, மீசை ஆனாலும் மனைவி, அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மதில் மேல் மாது, கிரேசி கிஷ்கிந்தா, சாக்லெட் கிருஷ்ணா உட்பட பல நாடங்கள் அதில் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் கலைமாமனி விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள கிரேசி மோகனின் மறைவு நாடகம் மற்றும் சினிமா துறைக்கு பேரிழப்பாகும். கிரேசி மோகன் நாடகம் மற்றும் சினிமா துறைக்கு ஆற்றிய அரும் பணிகள் அவரை என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;