‘ராட்சசி’யில் அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாற்றும் ஜோதிகா!

அறிமுக இயக்குனர் S.Y.கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம்  ‘ராட்சசி’ விரைவில் வெளியாகிறது!

செய்திகள் 12-Jun-2019 1:12 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் S.Y.கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் ‘ராட்சசி’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை பற்றி இயக்குனர் கௌதம் ராஜ் கூறியதாவது…

‘‘ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயின் ஒரு டீச்சராகதான் இருபார். என்னோட முதல் ஹீரோயின் என்னோட நாலாங்கிளாஸ் நிர்மலா டீச்சர். ஒவ்வொருத்தருக்கும் அவர் மனதில் இப்படி ஒரு டீச்சர் கட்டாயம் இருப்பார். அப்படிப்பட்ட ஒரு ஹீரோயின்தான் இப்படத்தில் வரும் ‘ராட்சசி’ கீதாராணி டீச்சர்! காலேஜில் எத்தனை வயசானாலும் ஏதாவது ஒரு வகையில் படிக்க முடியும். ஆனால் ஸ்கூல் லைஃப் ஒரு தடவை தான்! ‘ராட்சசி’ படத்தை பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அந்த நினைவுகளை தரும்.

கேள்வி கேட்டு அப்படியே நிற்கிறவங்களை நாட்கள் நகர நகர மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் செயலில் காட்டுபவர்களை வரலாறு பேசும். அதைப் போல இந்த ‘ராட்சசி’யை பற்றி பேசும். அரசுப் பள்ளிகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற எல்லோருடைய எண்ணம் தான் என்னுடைய எண்ணமும். அதை திரைவடிவமாக ‘ராட்சசி’ மூலம் சொல்லியிருக்கிறேன். இப்போது தமிழ் நாட்டில் இருக்கிற பெரிய சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானோரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை. அரசாங்க பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையில் நிறையெ வேறுபாடுகள் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படம்தான் இந்த ‘ராட்சசி’.

அரசுப்பள்ளிகளோட தரம் உயரணும். அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளின் தரம் உயரணும் என்கிற விஷயத்தை இந்த ‘ராட்சசி’ அழுத்தம் திருத்தமாக பேசும்’’ என்கிறார் இயக்குனர் கௌதம் ராஜ்.

விரைவில் ரிலீசாக இருக்கும் ‘ராட்சசி’ படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினாய் கவனிக்க, ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார்.

#Raatchasi #Jyotika #SyGowthamRaj #SeanRoldan #DreamWarriorPictures #GokulBenoy #Philomeinraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசி - ட்ரைலர்


;