‘தும்பா’வுக்கு கை கொடுத்த பிரபல நடிகர்!

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா நடிக்கும் ‘தும்பா’வில் சிறப்பு வேடத்தில்  ‘ஜெயம்’ ரவி!

செய்திகள் 18-Jun-2019 3:01 PM IST Top 10 கருத்துக்கள்

‘கனா’ படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன், அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன், விஜய் டி.வி.புகழ் தீனா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘தும்பா’. இயக்குனர் துரை செந்தில் குமாரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஹரீஷ் ராம் இயக்கியுள்ள இப்படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீசாகிறது. சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள தும்பாவின் விநியோக உரிமையை ‘கோட்டபடி’ ராஜேஷின் ‘KJR Studio’s நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் ஜெயம் ரவி ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்ததோடு, ‘ஜெயம்’ ரவி இடம்பெறும் ‘தும்பா’வின் ஒரு பாடல் காட்சியும் திரையிடப்பட்டது. காடு பின்னணியில் எடுக்கப்பட்ட ‘பேராண்மை’, ‘வனமகன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ‘ஜெயம்’ ரவி, காடு பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ஃபாண்டசி படமான ‘தும்பா’வில் ஒரு சிறப்பு கேரக்டரில் நடித்து தும்பா டீமுக்கு உற்சாகத்தை அளித்துள்ளர். அனிருத், சந்தோஷ் தயாநிதி, விவேக் மெர்வின் ஆகியோர் இசை அமைத்துள்ள ‘தும்பா’ கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ஃபாண்டசி படமாக 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

#Thumbaa #JayamRavi #Darshan #KeerthiPandian #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;