விஜயகாந்த் வழியில் போலீஸ் வேடமேற்கும் ஷண்முகபாண்டியன்!

விஜயகாந்த் வழியில் அவரது மகன் ஷண்முக பாண்டியனும் போலீஸ் வேடமேற்று நடிக்கிறார்!

செய்திகள் 18-Jun-2019 5:13 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஜி.பூபாலன். இவர் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடிக்க ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இப்போது அந்த படம் பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஷண்முக பாண்டியன் போலீஸ் வேடமேற்கிறார். ஷண்முக பாண்டியனின் தந்தையும் நடிகருமான விஜயகாந்த் நிறைய படங்களில் போலீஸ் கேரக்டர்களில் நடித்து சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இப்போது அவரது வழியில் அவரது மகன் ஷண்முகபாண்டியனும் போலீஸ் வேடமேற்கிறார். இந்த படம் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் நிறைந்த கதையாம். இதில் ஷண்முக பாண்டியன் கல்லூரி படிப்பை முடித்து காவல் துறையில் பயிற்சி பெற்று மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் துடிப்பு மிக்க ஒரு இளைஞராக நடிக்கிறாராம்!

’ஜி எண்டர்டெயினர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த ரோனிகா சிங் நடிக்கிறார். . இவர்களுடன் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். அர்ச்சனா ஷண்முக பாண்டியனின் அம்மாவாக நடிக்கிறார். மற்றும் முனீஸ்காந்த், அழகம் பெருமாள், பவன், சாய்தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அருண் ராஜ் இசை அமைக்கிறார். கார்க்கி பாடல்களை எழுதுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

;