விஜய்சேதுபதியிடம் மறைமுகமாக கோரிக்கை வைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

‘ஹவுஸ் ஓனர்’ பட ரிலீஸ் – விஜய்சேதுபதியிடம் மறைமுகமாக கோரிக்கை வைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

செய்திகள் 24-Jun-2019 11:25 AM IST Top 10 கருத்துக்கள்

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’. இந்த படம் சென்ற 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அன்றைய தினம் ‘சிந்துபாத்’ வெளியாகவில்லை! இதனை தொடர்ந்து ‘சிந்துபாத்’ இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று விளம்பரங்கள் மூலம் அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகிறது. அதனால் ‘சிந்துபாத்’ வருகிற 27, அல்லது 28-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 28-ஆம் தேதி ‘யோகி’ பாபுவின் ‘தர்மபிரபு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ மற்றும் ‘நட்சத்திர ஜன்னலில்’, ‘ஜீவி’, ‘காதல் முன்னேற்ற கழகம்’ ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த படங்களும் விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ படமும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டது மாதிரி ‘சிந்துபாத்’ வெளியாகுவதாக இருந்தால் ரசிகரக்ள் அந்த படத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் மற்ற படங்கள் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விஜய் சேதுபதியிடம் ஒரு கோரிக்கை வைப்பது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில்,

‘‘பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் வேண்டுகோளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செவி சாய்ப்பார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்!

#LakshmiRamakrishnan #VijaySethupathi #HouseOvner #Sindhubaadh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;