சுசீந்திரன் உதவியாளர் இயக்கும் படம் 'தோழர் வெங்கடேசன்'

சுசீந்திரன் உதவியாளர்  மகாசிவன் இயக்கும் படம் தோழர் வெங்கடேசன்!

செய்திகள் 1-Jul-2019 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

'காலா பிலிம்ஸ்' சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடிக்கும் படம் 'தோழர் வெங்கடேசன்'. சுசீந்திரனின் உதவியாளரான மகாசிவன் இயக்கும் இந்த படம் , எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்ற காட்சிகளை பல கோணங்களில் ட்ரான்தொழிட்நுட்பத்துடன் காட்சி படுத்தியுள்ளனர். இந்த படத்திற்கு வேதா செல்வம் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுகொள்ள, இசை அமைப்பாளராக சகிஷ்னா அறிமுகமாகிறார். இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு, ராஜேஷ் கண்ணாவோடு இணைந்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குனர் மகாசிவன். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

#Harishankar #MonicaChinnakotla #Mahashivan #Sagishna #ThozharVenkatesan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;