ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஜானர் மாறும் படம் 'கண்ணாடி'

கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'கண்ணாடி' இம்மாதம்12-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 1-Jul-2019 3:51 PM IST Top 10 கருத்துக்கள்

'திருடன் போலீஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கண்ணாடி'. சந்தீப் கிஷன், ஆன்யா சிங், கருணாகரன், ஆனந்த்ராஜ், பூர்ணிமா பாக்யராஜ் , பிரகதி, முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ள இப்படம் இம்மாதம் 12-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பு சற்று முன் நடைபெற்றது. 'வி.ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் விஜி சுப்பிரமணியன் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகிறது. தெலுங்கில் இப்படத்தை படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனே தயாரித்துள்ளார். படம் பற்றி சந்தீப் கிஷன் கூறும்போது,
''நான் நடடித்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. அந்த குறையை போக்கும்விதமாக இந்த படம் அமைந்துள்ளது. 'கண்ணாடி' பேய் படமா என்று கேட்கிறார்கள். இது பேய் படமல்ல. முற்றிலும் மாறுபட்ட கதைகளைத்தைக் கொண்ட படம் இது. இந்த படத்தின் திரைக்கதை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஜானர் மாறும். அதுமாதியான ஒரு திரைக்கதை அமைப்பைக் கொண்ட படம். இப்படத்தில் கிட்டத்தட்ட 350 கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஆனால் அந்த காட்சிகள் கிராபிக்ஸ் என்று கூற முடியாத விதமாக சிறப்பாக செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் ராஜு. இந்த படத்தில் இதுவரைக்கும் எந்த படத்திலும் வராத ஒரு விஷயம் இருக்கிறது. நல்ல ஒரு மெசேஜும் இருக்கிறது. அது என்னவென்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.
'மாநகரம்' படம் தமிழிலும், தெலுங்கிலும் எனக்கு மிகப்பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்தது. அதைப்போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறோம். 'மாநகரம்' படத்தை தொட்ர்ந்து என் நடிப்பில் வெளியான 'மாயவன்' தமிழில் வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் தெலுங்கில் 'மாயவன்' தவறான ஒருவரிடம் மாட்டிக்கொண்டதால் அங்கு சரியாக வெளியிடப்படவில்லை. புரொமோட் செய்யவும் இல்லை. அதனால் தெலுங்கு 'மாயவன்' சரியாக போகவில்லை. அந்த குறையை இந்த 'கண்ணாடி' போக்கும் என்பது நிச்சயம். கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள 'நரகாசூரன்' படமும் நன்றாக வந்துள்ளது. இந்த படத்தின் மீதுள்ள பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து விரைவில் ரிலீசாகும் என்று நம்புகிறேன்'' என்றார் சந்தீப் கிஷன்.

'கண்ணாடி' படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Kannaadi #SundeepKishan #AnyaSingh #CaarthickRaju #VStudios #SThaman #PKVarma #PraveenKL #SriiUmayalFilms #KannaadiFromJuly12th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆடை ட்ரைலர்


;