விஜய்யின் ‘பிகில்’ படத்தை கைபற்றிய பிரபல நிறுவனங்கள்!

விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வெளிநாட்டு உரிமைய ‘X GEN SUTUDIO’ நிறுவனமும், தமிழக விநியோக உரிமையை SCREEN SCENE நிறுவனமும்  கைபற்றியது

செய்திகள் 2-Jul-2019 1:09 PM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் ‘பிகில்’. ‘ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள்து. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பல்வேறு போஸ்டர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வைரலானது. தீபாவளி ரிலீசாக திரைக்கு வர இருக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெரார்ஃப், கதிர், விவேக், ஆனந்த்ராஜ், ரெபா மோனிகா ஜான், யோகி பாபு, தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்ற்னர்.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்புக்கு ரூபன், ஒளிப்பதிவுக்கு ஜி.கே.விஷ்ணு என்று கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பிரபல ‘X GEN SUTUDIO’ நிறுவனம் மற்றும் UNITED INDIA EXPORTS என்ற நிறுவனம் இணைந்து கைபற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘பேட்ட’, ‘அடங்கமறு’, ‘காஞ்சனா-3’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ உட்பட பல படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் பங்குபெற்றுள்ள இந்நிறுவனம் ‘பிகில்’ படத்தை மிகப் பெரிய விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையும் விற்கப்பட்டுள்ளது. ‘பிகில்’ படத்தை தமிழகமெங்கும் விநியோகம் செய்யும் உரிமையை பிரபல SCREEN SCENE நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவல்களை ’ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிற்து என்பதும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் மூலம் தெரிய வருகிறது.

#AGSEntertainment #Vijay #Thalapathy63 #Bigil #Atlee #Nayanthara #XGenStudio #UnitedIndiaExporters #ScreenSceneMediaEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;