இரண்டாம் பாக வரிசையில் விஜய்சேதுபதி படம்!

விஜய்சேதுபதி நடிப்பில் வெளீயான சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது!

செய்திகள் 9-Jul-2019 11:38 AM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின் ‘எந்திரன்’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, சூர்யாவின் ‘சிங்கம்’, தனுஷின் ‘மாரி’, விஷாலின் ‘சண்டக்கோழி’, சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’, விமலின் ‘களவாணி’ உட்பட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வெளியான நிலையில் இப்போது விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘சூது கவ்வும்’ படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் நடிக்க, இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தை ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். இதே நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் ‘இன்று நேற்று நாளை’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்க இருக்கிறது என்றும் இரண்டாம் பாகத்திலும் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

#SoodhuKavvum #SoodhuKavvum2 #VijaySethupathi #BobbySimha #AshokSelvan #RameshThilak
#Karunakaran #SanchitaShetty

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;