சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெறும் உதயநிதி படம்!

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்ன நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்திற்கு கொல்கத்தா சர்வதேச திரைப்பட் விழா விருது!

செய்திகள் 10-Jul-2019 12:30 PM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா இணைந்து நடித்து சென்ற ஃபிப்ரவரி மாதம் வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் ‘கண்ணே கலைமானே’ படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருதுபெற இருப்பதாக இயக்குனர் சீனுராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், ‘தாதா சாகேப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இப்படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


#KanneKalaimane #Udhaynidhi #Tamannah #SeenuRamasamy #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காளி - ட்ரைலர்


;