சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ புதிய தகவல்!

சுசீந்திரன் இயக்கியுள்ள கென்னடி படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 10-Jul-2019 12:30 PM IST VRC கருத்துக்கள்

பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘கென்னடி கிளப்’. இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி, முனீஸ்காந்த், அறிமுகம் மீனாக்‌ஷி, காயத்ரி உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். அத்துடன் இந்த படத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கபடிக்குழுவான வெண்ணிலா கபடி குழுவிலிருந்து 7 நிஜ கபடி வீராங்கனைகளையும் நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் காட்சி முடிவடைந்து சென்சாரில் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருக்கிற தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நல்லுச்சாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் சீனாவிலும் வெளியாக இருக்கிறது என்ற தகவலை படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#KennedyClub #Kabbadi #Susienthiran #SasiKumar #Bharathiraja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;