ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஷண்முகபாண்டியன் பட டைட்டில்!

அறிமுக இயக்குனர் ஜி.பூபாலன் இயக்கத்தில் ஷண்முகபாண்டியன் நடிக்கும் படம் ‘மித்ரன்’

செய்திகள் 11-Jul-2019 11:04 AM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முகபாண்டியன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தில் ஷண்முக பாண்டியன் போலீஸ் வேடமேற்று நடிக்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். ஆக்‌ஷனும் எமோஷனும் கலந்த கதையாக உருவாகும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். ‘மித்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஷண்முக பாண்டியன் துடிப்பு மிக்க ஒரு இளம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த போஸ்டரில் ‘மித்ரன்’ என்ற டைட்டிலுக்கு கீழே ‘THE COP’ என்ற டேக்லைனும் இடம்பெற்றுள்ளது. ஷண்முக பாண்டியனின் தந்தையும் நடிகருமான விஜயகாந்த் ஏராளமான போலீஸ் கேரக்டர்களில் நடித்துள்ளார். இப்போது அவர் வழியில் ஷண்முகபாண்டியனும் போலீஸ் வேடமேற்று நடித்து வருகிறார்.

‘மித்ரன்’ படத்தை படத்தை ’ஜி எண்டர்டெயினர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த ரோனிகா சிங் நடிக்கிறார். . இவர்களுடன் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். அர்ச்சனா ஷண்முக பாண்டியனின் அம்மாவாக நடிக்கிறார். மற்றும் முனீஸ்காந்த், அழகம் பெருமாள், பவன், சாய்தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அருண் ராஜ் இசை அமைக்கிறார். கார்க்கி பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை காஞ்சிபுரத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. #ARMurugadoss #ShanmugaPandian #Mithran #Boobalan #Vijayakanth #GEntertainers #RonicaSingh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;