‘தூங்காவனம்’ வரிசையில் ‘கடாரம் கொண்டான்’

விக்ரம் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 11-Jul-2019 11:12 AM IST Top 10 கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டநேஷனல்’ நிறுவனமும் ஆர்.ரவீந்திரனின் ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’. தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், நடிகர் நாசர் மகன் அபி ஹாசன், மலையாள நடிகை லெனா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படம் வருகிற 19-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு நடந்த இப்படத்தின் சென்சார் காட்சியில் ‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ராஜேஷ் என்.செல்வா இயக்கிய முதல் படமான ‘தூங்காவனம்’ படத்திற்கும் சென்சாரில் ‘U/A’ சர்டிஃபிக்கெட்தான் கிடைத்திருந்தது. ‘தூங்காவம்’ படம் போலவே ‘கடாரம் கொண்டான்’ படமும் அதிரடி ஆக்‌ஷன் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளதால் இப்படத்திற்கும் அதே ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

#Thoongavanam #KadaramKondan #ChiyaanVikram #AksharaHaasan #KadaramKondanFromJuly19th #RajeshMSelva #KadaramKondanClearsWithU/Acensor

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;