சூர்யாவின் ‘காப்பான்’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்!

சூர்யாவின் காப்பான் படத்தின் சாட்லைட் உரிமையை சன் டி.வி.நிறுவனம் கைபற்றியது!

செய்திகள் 11-Jul-2019 11:16 AM IST Top 10 கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘காப்பான்’. லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீசாகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் மூன்றாவது படமான இப்படத்தில் பாலிவுட் பிரபலம் பொம்மன் இரானி, ஆர்யா, சமுத்திரகனி ஆகியோரும் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘சிறிக்கி…’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிக்கிறார்கள். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை கைபற்ற பிரபலமான டி.வி.நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவியது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை சன் டி.வி. கைபற்றியிருக்கிற தகவலை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

#Kaappaan #KVAnand #LycaProductions #Suriya37 #Bandobast #HarrisJayaraj #SunTV #Anthony

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;