சரத்குமார், சசிகுமார் பட டைட்டில் அறிவிப்பு!

நிர்மல் குமார் இயக்கத்தில் சரத்குமாரும், சசிகுமாரும் இணைந்து நடிக்கும் படம் ‘நா நா’

செய்திகள் 11-Jul-2019 11:32 AM IST Top 10 கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர் இயக்கத்தில் சசிகுமாரும், சரத்குமாரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி துவங்கியது என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையிலும் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்றது. பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்த இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. ‘நா நா’ என்று வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது. ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.கே.ராம்மோகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை ஆனந்த் மணி கவனித்து வருகிறார். சரத்குமாரும், சசிகுமாரும் முதன் முதலாக இணைந்துள்ள இப்பத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

#SarathKumar #SasiKumar #NaaNaa #Salim #NVNirmalKumae #KalpataryPictures #PKRamMohan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்


;