இயக்குனராகும் வில்லன் நடிகர்!

ஆர்.கே.சுரேஷ் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘காலண்டர்’

செய்திகள் 11-Jul-2019 11:39 AM IST VRC கருத்துக்கள்

திரைப்பட விநியோகஸ்தாராக இருந்து பிறகு திரைப்பட தயாரிப்பாளராக புரொமோஷன் பெற்றவர் ஆர்.கே.சுரேஷ். இதனை தொடர்ந்து பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லன் நடிகராகவும் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்த ‘மருது’ படத்தில் முக்கியமான ஒரு வில்லன் கேரக்டரில் நடித்தார். இந்த படங்களை தொடந்து பில்லா பாண்டி படத்தின் மூலம ஹீரோவாகவும் களமிறங்கிய ஆர்.கே.சுரேஷ் இப்போது சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் இயக்குனராகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘காலண்டர்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த படம் ‘துள்ளுவதோ இளமை’ மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்றும் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

#RKSuresh #Calendar #ThulluvadhoIlamai #BillaPandi #Marudhu #TharaiThappattai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;