அஞ்சலி, ‘யோகி’ பாபு இணையும் படம்!

‘பலூன்’ படத்தை இயக்கிய சினீஷ் தயாரிப்பில் அஞ்சலி, யோகி பாபு இணைந்து நடிக்கும் படம்!

செய்திகள் 11-Jul-2019 12:08 PM IST VRC கருத்துக்கள்

‘தர்மபிரபு’, ‘கூர்கா’ முதலான படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யோகி’ பாபு, மற்றுமொரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அஞ்சலி மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ‘SOLDIERS FACTORY’ என்ற நிறுவனம் சார்பில் K.S.சினீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். கிருஷ்ணன் ஜெயராஜ், ‘தமிழ்படம்’ படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதனிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவராவார். அதைப்போல இந்த படத்தை தயாரிக்கும் K.S.சினீஷ் ‘பலூன்’ படத்தை இயக்கியவராவார். இவர்கள் இணையும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குனராக சக்தி வெங்கட்ராஜ் பணியாற்றுகிறார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்க, பாடல்களை அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

#Anjali #YogiBabu #Gurkha #RamarKPY

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;