புதுமுகங்கள் கூட்டணியில் ‘ரீல்’

புதுமுகங்கள் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள படம் ‘ரீல்’

செய்திகள் 11-Jul-2019 2:13 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கேப்டன் கருடு தயாரித்துள்ள படம் ‘ரீல்’. பல்வேறு இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற ஆர்.முனுசாமி திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இந்த படத்தில் அறிமுகங்கள் உதய்ராஜ், அவந்திகா கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் சரத், கேப்டன் கருடு, சுரேஷ் பிரேம், சூரஜ், முருகன், சரவணன், சங்கீதா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரும் நடிப்பில் புதுமுகங்களே!

இந்த படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். அதே நேரம் இப்படம் சமூகத்தில் இப்போது அடிக்கடி நடந்து வரும் பாலியல் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்ற கருத்தையும் சொல்ல வருகிறதாம்!

இந்த படத்தின் கதையை T.N.சூரஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் சந்திரன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை சுனில் பிரேம் செய்துள்ளார். படத்தொகுப்பை சாய் சுரேஷ் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை மனோஜ், விஷ்ணு ஆகியோர் செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்களும் புதுமுகங்களே! அதைப் போல இந்த படத்தில் பணியாற்றியுள்ள டெக்னீஷியன்களில் பெருபாலானவர்களும் தமிழ் சினிமாவிற்கு புதியவர்களே! இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

#Reel #SreeMukhaMovieMakers #Munuswamy #UdhayRaj #Avanthika #SanthoshChandran #TNSuraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;