விமல், ஸ்ரேயாவை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடிக்கும் படம் ‘சண்டகாரி – தி பாஸ்’

செய்திகள் 15-Jul-2019 11:05 AM IST VRC கருத்துக்கள்

‘மோகினி’ படத்தை தொடர்ந்து ஆர்.மாதேஷ் இயக்கி வரும் படம் ‘சண்டகாரி–தி பாஸ்’. ‘பாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனமும் ‘மெட்ரோ நெட் மல்டி மீடியா’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் விமல்,ஸ்ரேயா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் பிரபு, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் ஆகியோருடன் ‘மகதீரா’ படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடம் ஏற்கிறார்.

மலையாளத்தில் திலீப், மமதா மோகன்தாஸ் நடித்து, ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்படும் படம் இது. இந்த படத்தின் ஒளிப்பதிவை குருதேவ் கவனிக்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறார். தினேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை அய்யப்பன் கவனிக்கிறார். ஆக்‌ஷன், காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்து வருகிறாது. இந்த படத்தை இயக்கும் ஆர்.மாதேஷ் விஜய் நடிப்பில் ‘மதுர’, பிரசாந்த் நடித்த ‘சாக்லெட்’, விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்’, த்ரிஷா நடித்த ‘மோகினி’ உட்பட் பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#ShriyaSaran #Vimal #BossProductions #MetroNetMultiMedia #DirectorRMadhesh #SandakkariTheBoss #MyBoss #MamtaMohandas #Dileep

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;