பாலிவுட் பிரபலத்துடன் ஆனந்தி நடிக்கும் படம்!

அறிமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் ஆனந்தி, பாலிவுட் நடிகர் ரோஹித் சரஃப் இணைந்து நடிக்கும் படம் ‘எங்கே அந்தவான்’

செய்திகள் 25-Jul-2019 1:22 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர்கள் லிங்குசாமி, உதசங்கர் ஆகியோரிடம் பணிபுரிந்து அனுபவம் பெற்ற ராஜசேகர் துரைசாமி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘எங்கே அந்தவான்’. இந்த படத்தில் ராணி முகர்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘HICHKI’, ஷாருக்கான் நடித்த ‘DEAR ZINDAGI’ ஆகிய ஹிந்தி படங்களில் நடித்த ரோஹித் சரஃப் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ‘கயல்’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் புகழ் ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும், அறிமுகமாகும். அப்படியான ஒரு காதல் படைப்பாக உருவாகும் படமாம் ‘எங்கே அந்தவான்’. இந்த படத்தை ABBUNDU STUDIOS PRIVATE LIMITED என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கும்பகோணம், கோபிசெட்டிப் பாளையம், சென்னை, ஹைதராபாத் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ள இந்த படத்திற்கு ஜெகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். குறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து அனுபவம் பெற்ற தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பை ஆர்.கோவிந்த்ராஜ் செய்ய, கலை இயக்கத்தை தியாகரஜன் கவனித்துள்ளார்.

#Anandhi #Dheenadhayalan #RGovindaraj #Thiyagarajan #PoohSathish

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்


;