விக்ராந்த் படத்தில் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

விக்ராந்த், வசுந்தரா இணைந்து நடிக்கும் ‘பக்ரீத்’ படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்!

செய்திகள் 30-Jul-2019 3:20 PM IST Top 10 கருத்துக்கள்

ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. ஒரு ஒட்டகமும் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் இப்படத்தை எம்.எஸ்.முருகராஜ் தயாரித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா முதலான இடங்களில் பாமாகியுள்ள ‘பக்ரீத்’ திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை ரூபன் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை மதன் கவனித்துள்ளார்.

#Vikranth #VasundharaKashyap #UdhayanidhiStalin #M10Production #Bakrid #RedGiantMovies #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;