சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 90-வது பட அறிவிப்பு!

ஜீவா, அருள்நிதி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிடுகிறார்!

செய்திகள் 3-Aug-2019 2:49 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய நிறுவனம் ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம்! அத்துடன் ஏரளமான கலைஞர்களையும் இந்நிறுவனம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்நிறுவனம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படைப்பு இந்நிறுவனத்தின் 90-ஆவது தயாரிப்பாக உருவாகிறது. இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்க, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ‘மாப்ளசிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை உலக நண்பர்கள் தினமான ஆக்ஸ்ட் 4-ஆம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு தனுஷ் வெளியிடுகிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இப்படத்தில் பயணியாற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் விவரவங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்தை ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவன அதிபர் ஆர்.பி.சௌத்ரியின் மகனும், ஜீவாவின் சகோதரருமான ‘ஜித்தன்’ ரமேஷ் தயாரிக்கிறார் என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். அந்த படம்தான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 90-ஆவது படைப்பாக இப்போது உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#DhanushRevealsProductionNo90OfSuperGoodFilms #SuperGoodFilms #ProductionNo90 #Jiiva #ArulNithi #ManjimaMohan #PriyaBhavaniShankar #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;