ஜீவா, அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’

ஜீவா, அருள்நிதி நடிக்க ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-ஆவது படம் ‘களத்தில் சந்திப்போம்’

செய்திகள் 5-Aug-2019 11:22 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’. இந்நிறுவனத்தின் 90-ஆவது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் இணைந்து நடிக்கின்றன. இவர்களுடன் கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி என்.ராஜசேகர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தனுஷ் உலக நண்பர்கள் தினமான நேற்று வெளியிட்டார். ‘களத்தில் சந்திப்போம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். அதை அதிரடி ஆக்‌ஷன், காமெடி, காதல் என அனைத்து ஜனரஞ்சக விஷயங்களையும் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

சென்னை, தென்காசி, காரைக்குடி ஆகிய இடங்களில் படமாகியுள்ள இப்படத்தில் ராதாரவி, பாலசரவணன், இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, வேலா ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ‘பூலோகம்’ ராஜேஷ் ஆகியோருடன் ‘பிசாசு’ படத்தில் நடித்த பிரயாகா மார்ட்டின் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிரார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். எம்.முருகன் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
#SuperGoodFilms #ProductionNo90 #KalathilSandippom #Jiiva #ArulNithi #ManjimaMohan #NRajasekar #PriyaBhavaniShankar #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;