ஜெய்யுடன் 50 மும்பை அழகிகள் நடனம்!

ஜெய் நடிக்கும் ‘கேப்மாரி’ படத்திற்காக ஜெய்யுடன் 50 மும்பை அழகிகள் நடனம் ஆடினார்கள்!

செய்திகள் 7-Aug-2019 11:22 AM IST Top 10 கருத்துக்கள்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா இணைந்து நடிக்கும் படம் ‘கேப்மாரி’. ஜெய்யின் 25-ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்திற்காக சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர்.ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் சித்தார்த் விபின் இசையில், ஹரிசரன் பாடிய, ‘என் காதல் ராணி… என்னை தூக்கி வீசிட்டா…’ என்று துவங்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் ஜெய்யுடன் 50-க்கும் மேற்பட்ட மும்பை அழகிகள் நடனம் ஆடியுள்ளனர். இந்த பாடல் காட்சியை ‘தெறி’, ‘பேட்ட’ முதலான படங்களில் நடனம் அமைத்த ஷெரீஃப் நடனம் அமைத்தார். இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யாவுடன் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார் சீனிவாசன், படத்திற்கு இசை அமைக்கும் சித்தார்த் விபின் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்து வருகிறர். ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்து வருகிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனிக்கிறார்.

#Jai #SAChandrasekaran #Capmaari #VaibhaviShandilya #AthulyaRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;