ரஹ்மானின் ‘ஆபரேஷன் அரபைமா’

ரஹ்மான், நாடோடிகள் அபிநயா நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் படம் ‘ஆபரேஷன் அரபைமா’

செய்திகள் 7-Aug-2019 11:48 AM IST VRC கருத்துக்கள்

‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து ரஹ்மான் ‘ஆபரேஷன் அரபைமா’ என்ற மாறுபட்ட கதைகளத்தை கொண்ட ஒரு படத்தில் கப்பல் படை வீரராக நடிக்கிறார் என்ற தகவலை 2017, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தின் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மாறுபட்ட தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பிரபல மலையாள பட இயக்குனர்களான டி.கே.ராஜீவ் குமார், மற்றும் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய ப்ராஷ் இயக்கி வருகிறார். இவர் இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாகவும் பணிபுரிந்தவராம்.

‘டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்து இயக்குனர் ப்ராஷ் கூறும்போது, ‘‘நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாக கொண்ட
ஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது. இதனை சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன். இந்த கதைக்கு நாயகனாக ரஹ்மான் கிடைத்தது மிகப் பெரிய பலம்! கதாநாயகியாக ‘நாடோடிகள்’ படப் புகழ் அபிநயா நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது’’ என்றார்.

இந்த படத்தில் ரஹ்மான், அபிநயாவுடன் டினி டோம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி. வில்சன், அனூப் சந்திரன், பாலாஜி ரமேஷ், டேனி, மோகிதா பட்டக், மனிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராகேஷ் பிரம்மானந்தம் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ஃபீனிக்ஸ் உதயன் செய்துள்ளார். படத்தொகுப்பை விஜயகுமார், ஷைஜு ஆகியோர் கவனிக்கிறார்கள். இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
‘ . #Rahman #NadodigalAbinaya #Prash #OperationArapaima #RakeshBrammandan #TimeAndTideFrames #FinixUdhayan #Vijayakumar #Shaiji

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;