திண்டுக்கலில் விறுவிறுப்பாக நடந்து வரும் ‘கார்த்தி-19’ படப்பிடிப்பு!

‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் நடந்து வருகிறது

செய்திகள் 7-Aug-2019 12:35 PM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’, ‘தோழா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று படத்திற்கு படம் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’ ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து பெரும் வரவேற்பு பெற்றது. முற்றிலும் மாறுபட்ட கதை அமைப்பு கொண்ட இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மற்றும் வெளியீட்டு வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் ரிலீசாக இருக்கும் ‘கைதி’ படத்தை தொடர்ந்து கார்த்தி ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி முடிவடைந்தது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்ற 5-ஆம் தேதி திண்டுக்கலில் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு அங்கு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற இருக்கிறது. இது கார்த்தி நடிக்கும் 19-ஆவது படம் என்பதால் தற்காலிகமாக இப்படத்திற்கு ‘கார்த்தி-19’ என்று பெயரிடப்பட்ட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘டியர் காம்ரேட்’ ஆகிய தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிமா மந்தனா நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் நேரடித் தமிழ் படம் இதுதான். இந்த படத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனாவுடன் நெப்போலியன், ‘யோகி’ பாபு, சதீஷ், லால் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

அடுத்தடுத்து மாறுபட்ட கதை அமைப்பை கொண்ட படங்களை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபுவின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசை அமைக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை ஜெயச்சந்திரன் கவனிக்க, திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார் ராஜீவன் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்ற, தயாரிப்பு நிர்வாகத்தை அரவிந்த்ராஜ பாஸ்கரன் கவனித்து வருகிறார். அனைவரையும் மகிழ்வித்த கார்த்தியின் மற்ற படங்கள் போல் இப்படமும் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக உருவாகி வருகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#Karthi19 #Karthi #BakkiyarajKannan #RashmikaMandanna #SathyanSooryan #SRPrabhu #SRPrakashBabu #VivekMervin #EditorRuben #SathyanSooryan #DreamWarriorPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;