எப்போ வந்தாலும் ஹிட் தான்! - ரிலீஸ் தள்ளி வைத்த படம்!

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘கென்னடி கிளப்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

செய்திகள் 7-Aug-2019 2:47 PM IST Top 10 கருத்துக்கள்

பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘கென்னடி கிளப்’. இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி, முனீஸ்காந்த், அறிமுகம் மீனாக்‌ஷி, காயத்ரி உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கபடிக்குழுவான வெண்ணிலா கபடி குழுவிலிருந்து 7 நிஜ கபடி வீராங்கனைகளையும் நடிக்க வைத்துள்ளார். இந்த படம் சுதந்திர தனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சற்று முன் இப்படத்தின் ரிலீஸை ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ள தகவலை இயக்குனர் சுசீந்திரன் ட்விட்டரில் பதிவு செயதுள்ளார். அந்த பதிவில், ‘‘இது நம்ம மண்ணோட வீர விளையாட்டு! எப்போ வந்தாலும் ஹிட் தான்! ஆகஸ்ட் 22-ஆம் தேதி பாடி வரோம்’’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ‘நல்லுச்சாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரித்துள்ள இப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#KennedyClubFromAugust15th #KennedyClubAudioLaunch #KennedyClub #Susienthiran #SasiKumar #Bharathiraja #Samuthirakani #DImman #Kabaddi #NallusamyPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;