‘அட்டகத்தி’ தினேஷின் ‘நானும் சிங்கிள் தான்’

அறிமுக இயக்குனர் கோபி இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் படம்  ‘நானும் சிங்கிள் தான்’

செய்திகள் 12-Aug-2019 10:46 AM IST VRC கருத்துக்கள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ல மற்றொரு படம் ‘நானும் சிங்கிள் தான்’. அறிமுக இயக்குனர் கோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷுடன் தீப்தி திவேஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை ‘THREE IS A COMPANY’ என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், ‘புன்னகைப்பூ’ கீதா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் காதல் காமெடி கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகியுள்ளது என்றும் இந்த படத்தின் பட்ப்பிடிபு சென்னை மற்றும் லண்டனில் நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ள படக்குழுவினர் இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை டேவிட் ஆனந்த்ராஜ் கவனித்திருக்க, ஆதித்யன் படத்தொகுப்பு செய்து வருகிறார். ஹித்தேஷ் மஞ்சுநாத் இசை அமைக்கிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றியவராம். #AttakathiDinesh #NaanumSingleThaan #DirectorGopi #ThreeIsACompany

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;