ரிலீஸ் தேதி குறித்த ஜி.வி.பிரகாஷ் படம்!

ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்  ‘ஐங்கரன்’  செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 12-Aug-2019 11:42 AM IST VRC கருத்துக்கள்

‘ஈட்டி’ படத்தை தொடர்ந்து ரவிஅரசு இயக்கும் படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் இணைந்து நடிக்கும் இந்த படத்தை ‘COMMON MAN PRESENTS’ நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றது. சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இப்படத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தை ரவீந்திரர் சந்திரசேகரனின் ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியாருடன் அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் , படத்தொகுப்பை ராஜா முகமது கவனித்துள்ளார். கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசை அமைத்துள்ளார்.. #GVPrakash #MahimaNambiar #RaviArasu #CommonManPresents #AyngaranFromSeptember5th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;