ஆசிரியர் தினத்தில் வெளியாகும் ‘அடுத்த சாட்டை’

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி நடிக்கும் அடுத்த சாட்டை செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 12-Aug-2019 2:45 PM IST Top 10 கருத்துக்கள்

அன்பழகன் இயக்கத்தில் 2012-ல் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘சாட்டை’. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது ‘அடுத்தசாட்டை’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் சமுத்திரக்கனி தம்பி ராமையா, யுவன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். பிரபு திலகின் ‘11:11 புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அடுத்த சாட்டை’யை ரவீந்திரர் சந்திரசேகரனின் ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதே தினம் இந்நிறுவனம் வெளியிடும் மற்றொரு படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐங்கரன்’. இந்த இரண்டு படங்களும் ஒரே நிறுவனத்தின் வெளியீடாக செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

#Samuthirakani #Saattai #AduthaSaattai #MAnbazhagan #ThambiRamaiah #Yuvan #Athulya #PrabhuThilak #11:11Productions #JustinPrabhakaran #LibraProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;