பாரதிராஜாவிடம் கோரிக்கை வைத்த வசந்தபாலன்!]

தேசிய விருது சர்ச்சை - பாரதிராஜாவிடம் கோரிக்கை வைத்த இயக்குனர் வசந்தபாலன்!

செய்திகள் 14-Aug-2019 3:20 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவிஅரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் இணைந்து நடிக்கும் இந்த படத்தை ‘COMMON MAN PRESENTS’ நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினாராக இயக்குனர் பாரதிராஜா கலந்துக்கொள்ள ஏராளமான திரையுலக பிரமுகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது, ‘‘சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 66-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்திருப்பதில் தமிழ் திரைப்படங்களும், கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறகணிக்கப்பட்டு உள்ளது! தமிழுக்கு ஒரே ஒரு விருது மட்டும்தான் கிடைத்துள்ளது. தமிழில் திறமையான கலைஞர்கள் இல்லையா? தரமான திரைப்படங்கள் வெளியாகவில்லையா? தமிழ் திரை உலகை மொத்தமாக புறகணித்ததற்கு எதிராக உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழக அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும்! வரும் காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க பாரதிராஜா தேவையான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கிறேன்’’ என்றார் வசந்தபாலன்!

இதற்கு பதிலளித்து இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ‘‘தமிழ் நாட்டு கலைஞர்கள் ஒன்றும் மற்ற மாநில கலைஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல! இங்கும் நிறைய திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள்! இங்கும் நிறைய தரமான திரைப்படங்களை எடுக்கிறார்கள். ‘பரியேரும் பெருமாள்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்று விருது வழங்க கூடிய படங்கள் தமிழிலும் வெளியாகிறது. ஆனால் என்ன நமது படங்களை எடுத்துச் செல்லக் கூடிய ஒரு கட்டமைப்பு இங்கு இல்லை! மற்ற மாநிலங்களில் உள்ளது மாதிரி நமக்கென்று தமிழ் ஃபிலிம் சேம்பர் என்று ஒன்று இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியம்! அதற்கான முயற்சிகளை விரைவில் தமிழ் திரைபப்ட தயாரிப்பாளர் சங்கம் செய்யும்’’ என்றார்!
#Ayngaran #GVPrakashKumar #Bharathiraja #Vasanthabalan #EettiRaviArasu #CommonManPresents #MahimaNambiar #AyngaranAudioLaunch #AyngaranFromSeptember5th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;