வெற்றிமாறனின் ‘சங்கத்தலைவன்’ அப்டேட்!

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘சங்கத்தலைவன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகிறது!

செய்திகள் 14-Aug-2019 5:47 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்து ‘உதயம் என்.எச்.4’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுமகமானவர் மணிமாறன். இவர் இயக்கிய இரண்டாவது படம் ஜெய் நடித்த ‘புகழ்’. இந்த படத்தை தொடர்ந்து மணிமாறன் இப்போது இயக்கி வரும் படம் ‘சங்கத்தலைவன்’. இந்த படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ‘அறம்’ படப் புகழ் சுனுலட்சுமி, ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்களில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் இசை அமைக்கிறார். ஸ்ரீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘சங்கத்தலைவன்’ படம் விசைத்தறி தொழில் மற்றும் அத்தொழில் செய்யும் தொழிலாளர்களின் பிரச்சனைகளை விவரிக்கும் பாரதிதாசனின் ‘தறியுடன்’ என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த படத்தை வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி’ மற்றும் ‘உதய் புரொடக்‌ஷன்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

#Samuthirakani #VJRamya #GrassRootFilmCompany #UdayProductions #Manimaran #SangaThalaivan #Karunas #RobertSargunam #SrinivasanDevamsam #GBVenkatesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;