சமூகத்திற்கு நல்ல மெசேஜ் சொல்ல வரும் மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படம்!

சித்திக் உதவியாளர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் ‘மெய்’

செய்திகள் 20-Aug-2019 11:54 AM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் அறிமுகம் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘மெய்’. இவர்களுடன் கிஷோர், சார்லி, அஜய்கோஷ், ராம்தாஸ் ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தை ‘சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ராம் சுந்தரம், பிரீத்தி கிருஷ்ணா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நிக்கி சுந்தரம், பிரபல TVS நிறுவனத்தின் அதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்காரின் பேரனாவார்!

வருகின்ற 23-ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘மெய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. அப்போது படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறும்போது, ‘‘நான் இயக்குனர் சித்திக்கிடம் நிறைய படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளேன். இந்த படம் மருத்துவத்தை பற்றிய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் நடக்கும் ஒரு மாபியா பற்றிய கதையாக மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது’’ என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘‘மெய் படம் மருத்துவ சிகிச்சை முறைகேடுகளை வெளிப்படுத்தும் கதையமைப்பை கொண்ட படமாகும். நான் சாதாரண காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். என்னிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் கட்டண்டம் வசூலித்தார்கள். அதே நேரம் நேர்மையாக செயல்படும் நல்ல மருத்தவமனைகளும் உள்ளன. சிகிச்சிக்கு செல்பவர்களை மறைமுகமாக வஞ்சிக்கும் கும்பல் பற்றிய கதைதான் இப்படம். இந்த படத்தை எல்லோரும் பாரக்க வேண்டும்’’ என்றார்.

கதாநாயக்ன நிக்கி சுந்தர்ம் பேசும்போது, ‘‘நான் அமெரிக்காவில் படித்தேன். ஆனாலும் தமிழ் படங்கள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் படங்களையும் பார்த்து வளர்ந்தவன்! சினிமா மற்றும் கலை மீதுள்ள் ஆர்வத்தில் நடிக்க வந்துள்ளேன். ‘மெய்’ படத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் உள்ளன. அதனால் இப்படத்தில் நடித்தேன்’’ என்றார்.

இந்த படத்தின் பின்னணி இசையை அனில் ஜான்சன் அமைத்திருக்க பாடல்களுக்கான இசையை பிரித்வி குமார் வழங்கியுள்ளார். ஒளிப்பதிவை வி.என்.மோகன் செய்துள்ளார். கலை இயக்கத்தை செந்தில் ராகவன் கவனித்துள்ளார். பிரீத்தி மோகன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

#AishwaryaRajesh #Mei #SABaskaran #NickySundaram #Kishore #SundaramProductions #AnilJohnson #PrithviKumar #VNMohan #PreethiMohan #SenthilRaghavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;