விஜய் படத்துடன் களமிறங்கும் விஜய்சேதுபதி படம்!

விஜய்யின் ‘பிகில்’ படத்துடன்  விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படமும் தீபாவளிக்கு ரிலீசாகிறது!

செய்திகள் 26-Aug-2019 11:34 AM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘பிகில்’ ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கால்பந்தாட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்! பெரும் ஏதிர்பார்ப்புடன் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘பிகில்’ படத்துடன் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ படமும் வெளியாக இருக்கிறது! இது குறித்த அறிவிப்பை இந்த படத்தை தயாரிக்கும் ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தனது அதிகாரரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ‘சங்கத்தமிழன் தீபாவளி கொண்டாட்டம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படமும் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகி உள்ளது.

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய பாரம்பரிய மிக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் ‘சங்கத்தமிழன்’ படத்தை ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இவர்களுடன் சூரி, நாசர், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசை அமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் மற்றும் ‘கமலா….’ என்று துவங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருப்பதால் விஜய்சேதுபதி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#VijaySethupathi #RaashiKhanna #SangaThamizhan #Soori #VijayChandar #VijayaProductions #VivekMervin #CinematographerVelraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;