‘இணைய தலைமுறை’யை தொடர்ந்து ‘தேடு’

‘இணைய தலைமுறை’ படத்தை இயக்கிய சுசி ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தேடு’.

செய்திகள் 26-Aug-2019 6:24 PM IST Top 10 கருத்துக்கள்

‘இணைய தலைமுறை’ என்ற படத்தை இயக்கிய சுசி ஈஸ்வர் அடுத்து இயக்கும் படம் ‘தேடு’. ‘கிஷோர் சினி ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சிவகாசி முருகேசன் தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்சய் கதாநாயகனாகவும், ‘உறுதிகொள்’, ‘வீராபுரம்’ ஆகிய படங்களில் நடித்த மேக்னா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ - மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணிக்கும் மாறுபட்ட கதை அமைப்புகொண்ட படமாம் ‘தேடு’. இந்த படத்தில் தயாரிப்பாளர் சிவகாசி முருகேசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி புகழ் பிரபாகரன் மற்றும் ராணி, கமலா, சுவாமிதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பு செய்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத, டி.ஜே.கோபிநாத் இசை அமைத்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. .

#SuCiEswar #InayaThalaimurai #SivakasiMurugesan #KishoreCineArts #Sanjay #Meghna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;