கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் வெளியாகி வசூல் மற்றும் இரண்டு தேசிய விருதுகளை அள்ளிய ஹிந்தி படம் ‘அந்தாதுன்’. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்யும் உரிமையை நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார் என்றும் இந்த படத்தில் அவரது மகன் பிரசாந்த் நடிக்க இருக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனனை வைத்து இயக்க தியாகராஜன் திட்டமிட்டுள்ளார் என்றும் அதனால் அவரிடம் அதறிகான பேச்சு வார்த்தையில் தியாகராஜன் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கௌதம் சுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ செப்டம்பர் 6-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் மற்றொரு படமான ‘துருவநட்சத்திரம்’ பட வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் பிரசாந்தை வைத்து ‘அந்தாதுன்’ தமிழ் ரீ-மேக்கை இயக்க கௌதம் வாசுதேவ் மேனன் சம்மதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும் என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தியாகராஜன் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
மிகப் பெரிய வெற்றியை பெற்ற மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும்...
ஹிந்தி மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. தேசிய விருதும் கிடைத்த இப்படத்தின் தமிழ்...