இந்த வாரம் எத்தனை படங்கள் திரைக்கு வருகின்றன?

இந்த வாரம் ‘சிக்சர்’, ‘மயூரன்’, ‘சாஹோ’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 30-Aug-2019 10:53 AM IST Top 10 கருத்துக்கள்

சென்ற வாரம் ‘கென்னடி கிளப்’ பக்ரீத், ‘மெய்’ ஆகிய மூன்று நேரடித் தமிழ் படங்கள் மட்டுமே வெள்ளித்திரைக்கு வந்தன! அந்த வரிசையில் இந்த வாரம் ஏத்தனை படங்கள் வெளியாகின்றன என்று பார்ப்போம்!

1.சிக்சர்

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில், வைபவ், பாலக் லல்வானி கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘சிக்சர்’. ‘வால்மேட் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ராதாரவி, சதீஷ், ராமர், இளவரசு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடித்துள்ளனர். இரவு நேரங்களில் கண் தெரியாத ஒரு இளைஞரின் வாழ்க்கையை மையமக வைத்து காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.ஜி.முத்தையா கவனித்துள்ளார். படத்தொகுப்பை ஜோமின் செய்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகிறது.

2.மயூரன்

இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்த நந்தன் சுப்பராயன் இயக்கியுள்ள படம் ‘மயூரன்’. இந்த படத்தில் அஞ்சன், வேலா ராமமூர்த்தி, அஸ்மிதா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ‘மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று அர்த்தம் என்றும் இந்த விஷயத்தை கதைக்கருவாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்’ என்றும் சொல்லியுள்ளார் இயக்குனர் நந்தன் சுப்பராயன். ‘PFS ஃபினாகில் ஃபிலிம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்திற்கு இசை அமைத்த ஜுபின் இசை அமைத்துள்ளார். அஸ்வின் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படமும் இந்த வார ரிலீசாக இன்றுஇ வெளியாகிறது.

3. சாஹோ

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘சாஹோ’. இந்த படம் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. சுதிஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸுடன் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நித்தின் முகேஷ், மந்திராபேடி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். புரொடக்‌ஷன் வடிவமைப்பை சாபு சிரில் கவனித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ‘U.V.CREATIONS’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்று உலகம் முழுக்க மூன்று மொழிகளில் வெளியாகிறது..

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;