தீபாவளிக்கு முன்னதாக களமிறங்கும் ‘சங்கத்தமிழன்’

தீபாவளிக்கு முன்னதாக வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’

செய்திகள் 30-Aug-2019 11:20 AM IST Top 10 கருத்துக்கள்

‘ஸ்கெட்ச்’ படத்தை தொடர்ந்து விஜய்சந்தர் இயக்கியுள்ள படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, அஷுதோஷ் ராணா, ரவி கிஷன், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ஆகிய படங்களும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘சங்கத்தமிழன்’ படத்தை தீபாவளிக்கு முன்னதாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் இப்போது திட்டமிட்டு அதற்கான வேலைகளில் பிசியாகியுள்ளனர். அக்டோபர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. இந்நிலையில் ‘சங்கத்தமிழன்’ படத்தை அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இப்படக் குழுவை சேர்ந்த ஒருவரிடமிருந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது. எப்படியும் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் மாதத்தில் வெளியாகி விடும் என்கிறார் அவர். இசைக்கு விவேக் – மெர்வின், படத்தொகுப்பு கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ் என்று கூட்டணி அமைத்துள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தை ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.
#VivekMervin #CinematographerVelraj #VijaySethupathi #RaashiKhanna #SangaThamizhan #Soori #VijayChandar #VijayaProductions #SangaThamizhanBeforeDiwali

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;