விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த தெலுங்கு பிரபலம்!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில், அல்லு சிரீஷ், ஸ்ரீதிவ்யா?

செய்திகள் 3-Sep-2019 12:43 PM IST Top 10 கருத்துக்கள்

‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்திலும் விஜய் ஆண்டனி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். விஜய் மில்டனும், விஜய் ஆண்டனியும் முதன் முதலாக இணையும் இந்த படத்தை ‘தியா மூவீஸ்’ நிறுவனமும், இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்ற தகவலையும் அப்போது பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு சிரீஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராதா மோகன் இயக்கத்தில் 2013ல் வெளியான ‘கௌரவம்’ படத்தில் அல்லு சிரீஷ் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி 6 ஆண்டுகளான நிலையில் விஜய் ஆண்டனி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்! அதே நேரம் இப்படத்தில் கதாநாயகியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஈட்டி’, ‘காக்கி சட்டை’, ‘காஷ்மோரா’ உட்பட பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் இந்து குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை! கோவா, டாமன், ட்யு உட்பட்ட கடல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (அக்டோபர்) துவங்க இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;