இறுதிகட்டத்தை எட்டிய சீமான், ஆர்.கே.சுரேஷ் படம்!

சீமான், ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘அமீரா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

செய்திகள் 10-Sep-2019 4:51 PM IST Top 10 கருத்துக்கள்

‘தம்பி திரைக்களம்’ மற்றும் ‘ஸ்டுடியோ 9’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. இந்த படத்தில் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்க, பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தை சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய ரா.சுப்பிரமணியன் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா சென்ற ஃபிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்போது நடந்து வருகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்குமரன் கூறும்போது, ‘‘நாங்கள் மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு சில நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்து விடும். இதற்கு காரணம் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அனுசித்தாராதான்! அனுசித்தாரா மலையாளத்தில் ‘சிங்கிள் டேக் நடிகை’ என்று அழைக்கப்படுபவர்! தமிழிலும் அதைப்போல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி கூடுமான வரை ஒரே டேக்கில் நடித்து அசத்துவதால் நாங்கள் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை பற்றிய கதை இது என்பதால் இப்படத்திற்கு ‘அமீரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை செழியன் செய்து வருகிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
#Seeman #RKSuresh #Ameera #AnuSithara #RSubramanian #Chezhiyan #ToLet #Vairamuthu #VishalChandrasekar #SanLokesh #Studio9 #Vetrikumaran #ThambiThiraikalam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;