எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகனுடன் இணைந்த பிரபலம்!

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்!

செய்திகள் 14-Sep-2019 12:50 PM IST VRC கருத்துக்கள்

பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன் அடுத்து இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் மேலும் பல புதிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ’ என்றா நிறுவனம் சார்பில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்து நடிக்கிறார். ராதா மோகனும் எஸ்.ஜே.சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றும் இப்படம் முற்றிலும் புதிய பாணியில் உருவாகும் காதல் கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். ‘கோமாளி’ படத்திற்கு ஒளிப்ப்திவு செய்த ரிச்சர்ட் எம்.நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவும், ராதாமோகனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ள இப்படத்தை 2020 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளது.

எஸ்.ஜே,.சூர்யா, இப்போது ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார், இந்த படம் தவிர எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘இரவாக்காலம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.


#SJSuryah #AngelStudiosMHLLP #YuvanShankarRaja #RadhaMohan #RichardMNathan #Kadhirr #SJSuryahFilmFromFebruary14th2020

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;