பாலா உதவியாளர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி!

அறிமுக இயக்குனர் ஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிக்கும் படம் ‘மிருகா’

செய்திகள் 14-Sep-2019 12:59 PM IST Top 10 கருத்துக்கள்

சென்னையிலுள்ள அடையார் திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், இயக்குனர் பாலாவுடன் ‘நான் கடவுள்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான ஜே.பார்த்திபன் இயக்கும் படம் ‘மிருகா’. இந்த படத்தில் ஸ்ரீகாந்தும், ராய் லட்சுமியும் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ‘ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் பி.வினோத் ஜெயின் தயாரிக்கிறார். சென்னையை மையமாக கொண்டு பல்வேறு தொலைகாட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கிய வினோத் ஜெயின் முதன் முதலாக திரைப்பட தயாரிப்பில் இறங்கி தயாரிக்கும் படம் ‘மிருகா’ என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கொலைகாரன் தனது அழகு, பண்பு ஆகியவற்றை வைத்து பெண்களை ஏமாற்றி வாழந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின்போது ஒரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அந்த பெண்ணையும் ஏமாற்ற முயற்சிக்கும்போது விதி வேறுவிதமாக அமைந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சொல்லும் படமாம் ‘மிருகா’.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமியுடன் தேவ்கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், பிளாக் பாண்டி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்பவர் எம்.வி.பன்னீர் செல்வம். படத்தொகுப்பை சுதர்சன் கவனிக்க, மிலன், எஸ்,ராஜா மோகன் ஆகியோர் கலை இயக்கத்தை கவனிக்கின்றனர். அருள் தேவ் இசை அமைக்கிறார். ‘தளபதி’ தினேஷ், ஸ்ரீதர் ஆகியோர் சண்டை காட்சிகளை அமைக்கிறார்கள். சென்னை, பொள்ளாச்சி, மூணாறு, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படமாகியுள்ள ‘மிருகா’ விரைவில் ரிலீசாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;