நிவின் பாலிக்கு ஜோடியாகும் ‘அருவி’ பட ஹீரோயின்?

‘அருவி’ படத்தில் கதையின் நாயகியாக நடித்த அதிதி பாலன் மலையாள படமொன்றில் நிவின் பாலிக்கு ஜோடியாகிறார்!

செய்திகள் 16-Sep-2019 12:40 AM IST Top 10 கருத்துக்கள்

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் கதையின் நாயகியாக நடிக்க, 2017, டிசம்பர் மாதம் வெளியான படம் ‘அருவி’. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தில் நடித்த அதிதி பாலனை இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அதிதி பாலன் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் லிஜோ கிருஷ்ணா இயக்க, நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ‘படவெட்டு’ என்ற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாகிறார் அதிதி பாலன் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. மலையாள நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ‘96’ படப் புகழ் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் சன்னி வெய்ன் ராஜு முருகன் இயக்கி வரும் ‘ஜிப்ஸி’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். நிவின் பாலியும், அதிதி பாலனும் இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள படம் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘மூத்தோன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;