மலையாள ஹிட் படத்தை ரீ-மேக் செய்து நடிக்கும் ஆர்.கே.சுரேஷ்!

மலையாளத்தில் ஹிட்டான ‘ஜோசஃப்’ படத்தை தமிழில் ரீ-மேக் செய்து நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ்!

செய்திகள் 17-Sep-2019 11:14 PM IST Top 10 கருத்துக்கள்

சென்ற ஆண்டு (2018) நவம்பர் மாதம் வெளியாகி ஹிட்டடித்த மலையாள படம் ‘ஜோசஃப்’. பத்மகுமார் இயக்கிய இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதையின் நாயகனாக நடித்திருந்தார். மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிய இப்படம் வசூலை குவித்ததோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்காக ஜோஜு ஜார்ஜுக்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். தமிழில் இந்த படத்தை இயக்குனர் பாலாவின் ‘வி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மலையாள ‘ஜோசஃப்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்த கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். ‘ஜோசஃப்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரண்டு கெட்-அப்களில் வருவார். அதைப்போல தமிழிலும் மாறுபட்ட இரண்டு கெட்-அப்களில் நடிக்க இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்! மலையாள ‘ஜோசஃப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழ் ரீ-மேக்கையும் இயக்குகிறர். இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இப்படத்தில் பணிபுரிய இருக்கும் இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.

#RKSuresh #JojuGeorge #MPadmakumar #VStudios #Bala #NationalAwardWinningActor

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;