17 விருதுகள் பெற்ற படம் ‘ஒற்றை பனைமரம்’

17 விருதுகள் பெற்ற ‘ஒற்றை பனைமரம்’ படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்!

செய்திகள் 26-Sep-2019 11:21 AM IST Top 10 கருத்துக்கள்

ஆர்.எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்துள்ள படம் ‘ஒற்றைப் பனைமரம்’. நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும், தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருக்கும் தணிகைவேல் பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இவர் தயாரித்திருக்கும் ‘ஒற்றை பனைமரம்’ படம் 40 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை வாங்கி குவித்துள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலரை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

இந்த படத்தை புதியவன் ராசையா இயக்க, அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை மகிந்த அபேசிங்க கவனித்துள்ளார். இந்த படத்தில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;