‘யோகி’ பாபுவின் ‘பப்பி’ ரிலீஸ் தகவல்கள்!

யோகி பாபு, சம்யுக்த ஹெக்டே நடிக்கும் ‘பப்பி’ அக்டோபர் 11-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 27-Sep-2019 10:31 AM IST Top 10 கருத்துக்கள்

‘யோகி’ பாபு, வருண், சம்யுக்த ஹெக்டே ஆகியோர் நடிக்கும் படம் ‘பப்பி’. இந்த படத்தில் படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு நாயும் நடிக்கிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கோமாளி’ படத்தை தயாரித்த ஐசரி கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் அக்டோபர் 11-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ‘நட்டு தேவ்’ என்கிற மொரட்டு சிங்கிள். விலங்குகளை மையபடுத்தி எடுக்கப்பட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீசான நிலையில் நாய் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தரண் குமார் இசை அமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகம் முழுவதும் சக்திவேலனின் ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.
#Varun #VelsFilmInternational #DrIsariKGanesh #SamyukthaHedge #YogiBabu #Puppy #DharanKumar #DeepakKumarPadhy #Richard #PuppyFromOct11th #PuppyTrailerFromToday

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;