உணவு கலப்படம் பற்றி பேச வரும் படம் 'அருவம்'

சித்தார்த் உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கும் படம் 'அருவம்'

செய்திகள் 1-Oct-2019 4:53 PM IST Top 10 கருத்துக்கள்

இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாய் சேகர் இயக்கியுள்ள படம் ‘அருவம்’. இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன் கலந்த ஹாரர் ரக பமாக உருவாகியுள்ள இப்படம் உணவில் கலப்படம் செய்வதினால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் உணவுபாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார். இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் குறித்து சித்தார்த் கூறும்போது, ''இந்த படத்தின் கதையை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதுவரை யாரும் சொல்லப்படாத நிறைய விஷயங்களை இப்படத்தில் இயக்குனர் சாய்சேகர் சொல்லியுள்ளார். உணவில் கூட கலப்படம் செய்து அதை வியாபாரம் செய்வதனால் மனித குலம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும் இந்த படம், சமூகத்துக்கு நல்ல ஒரு மெசேஜை சொல்லும் கதையாக அமைந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார் சித்தார்த்.

''அருவம்' என்றால் உருவம் இல்லாதது என்று அர்த்தம். அருவம் என்ற தலைப்பிற்கான காரணம் என்ன என்பது இப்படத்தின் கதை விளக்கும்'' என்று சொன்ன இயக்குனர் சாய் சேகர், ''இந்த படம் சமூகத்திற்கு நல்ல ஒரு கருத்தை சொல்ல வருகிறது. இந்த படத்தில்
கேத்ரின் தெரெசா ஏற்று நடித்துள்ள வேடம் முற்றிலும் மாறுபட்டது. Smell Cence இல்லாதவராக வரும் அவருடைய கதாபாத்திரம் புதுமையாக இருக்கும் '' என்றும் சொன்னார் இயக்குனர் சாய் சேகர்.

இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசாவுடன் சதீஷ், காளிவெங்கட், மதுசூதன் ராவ், கபிர் துஹான் சிங் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.


#Siddharth #CatherineTresa #SaiShekar #AruvamPressMeet #SSThaman #Aruvam #KleemEntertainment #TridentArts #AruvamFromOct11th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;