மகனை ஹீரோவாக களமிறக்கும் தங்கர்பச்சான்!

‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படம் மூலம் தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் தங்கர்பச்சான்!

செய்திகள் 9-Oct-2019 10:44 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது புதிதல்ல. அந்த வரிசையில் பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக களமிறக்கி இயக்கி வரும் படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’. முதல் படத்திலேயே தனது மகனை நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் தங்கர்பச்சான். இந்த படத்தில் மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மன்சூரலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்க, முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘‘சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு 70 நாட்கள் ஆன நிலையில் இன்றுடன் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைகிறது’’ என்பதை இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்தின் முதல் பார்வையை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தங்கர்பச்சான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் இந்த படத்திற்கு தரண்குமார் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் ஆகியோர் கவனித்துள்ளனர். படத்தொகுப்பை - சாபு ஜோசஃப் செய்கிறார்.

கலை இயக்கத்தை சக்தி செல்வராஜ் செய்துள்ளார். இந்த படத்தை ‘ பிஎஸ்என் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

#ThangarBachan #VijithBachan #TakkuMukkuTikkuThalam #MilanaNagaraj #AshwiniChandrasekhar #DharanKumar #VJSabuJoseph

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;