சுந்தர்.சி., ஆதி கூட்டணியின் ‘நான் சிரித்தால்…’

சுந்தர்.சி. தயாரிப்பில் ஹிப் பாப் தமிழா  ஆதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் ‘நான் சிரித்தால்…’

செய்திகள் 9-Oct-2019 11:12 AM IST Top 10 கருத்துக்கள்

‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் ஷங்கரிடம் ‘2.0’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா இயக்குகிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். பெயரிடப்படாமல் சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ‘நான் சிரித்தால்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் கூடிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் ஆயுதபூஜையன்று வெளியிட்டனர். இந்த படத்தில் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியுடன் சமீபத்தில் வெளியான ‘தமிழ்படம்-2’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேனன் கதையின் நாயகியாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. ஆதி, ஐஸ்வர்யா மேனனுடன் இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமாரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம். வழக்கமாக தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசை அமைக்கும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதிதான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#NaanSirithaal #HiphopTamizha #Raana #AvniGroups

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;